✍️ மே 18
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
இன்று மே 18. இந்த நாளை எங்களால் மறக்க முடியாது — மறக்கவும் கூடாது.
📝 இன்றைய செய்தி இலக்கணம் பற்றியது மட்டுமல்ல. இது நினைவு பற்றியது. வரலாறு பற்றியது.
✍️ மே 18, 2009 — இலங்கையில் என்ன நடந்தது?
2009 ஆம் ஆண்டு மே மாதம், இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் தன் இறுதிக் கட்டத்தை அடைந்தன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் — குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் — “பாதுகாப்பு மண்டலம்” என அழைக்கப்பட்ட இடங்களில் உயிரிழந்தனர். அவர்களுக்கு தப்பிச் செல்ல வழியிருக்கவில்லை. உணவோ, மருந்தோ, உதவியோ கிடைக்கவில்லை.
இந்த நாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் இனப்படுகொலை நினைவு நாளாகக் கருதப்படுகிறது.
∙ génocide — இனப்படுகொலை
∙ massacre — படுகொலை
∙ civils — பொதுமக்கள்
∙ réfugiés — அகதிகள்
∙ mémoire — நினைவு
∙ deuil — துக்கம்
∙ résistance — எதிர்ப்பு
∙ dignité — மரியாதை
∙ justice — நீதி
∙ vérité — உண்மை
📌 சில வசனங்கள் :
“Nous n’oublierons jamais.” - நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
“La vérité doit être reconnue.” - உண்மை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.
“Les victimes méritent la justice.” - உயிரிழந்தவர்கள் நீதி பெற தகுதியுடையவர்கள்.
நாம் மறக்கவில்லை. மறக்க மாட்டோம்.
நன்றி,
தீபக் 🙏

Nous n'oublierons pas le gènocide
Merci beaucoup 🙏🙏🙏