🇫🇷 தயக்கமின்றி
பிரெஞ்சு பேசுவது எப்படி ?
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
பிரெஞ்சு மொழியில் சிறிய வார்த்தைகள் தான் — chez, pour, comme, par — ஆனால் அவை பெரிய அர்த்த மாற்றத்தை ஏற்படுத்தும். இன்று இந்த 4 prépositions-ஐ உதாரணங்களுடன் பார்ப்போம்.
📝 Chez — ஒருவரின் இடத்தில் / வீட்டில்
∙ Je vais chez le médecin — நான் மருத்துவரிடம் செல்கிறேன்.
∙ Chez moi, on parle français — என் வீட்டில் பிரெஞ்சு பேசுகிறோம்.
✍️ Pour — க்காக
∙ Ce cadeau est pour toi — இந்த பரிசு உனக்காக.
∙ Je travaille pour réussir — நான் வெற்றி பெறுவதற்காக உழைக்கிறேன்.
💡 Comme — போல / ஆக
∙ Il travaille comme professeur — அவர் ஆசிரியராக பணிபுரிகிறார்.
∙ Comme toujours, elle est en retard — எப்போதும் போல, அவள் தாமதமாக வருகிறாள்.
📌 Par — மூலம் / வழியாக
∙ Apprendre par la pratique — பயிற்சியின் மூலம் கற்றுக்கொள்வது.
∙ Il est entré par la porte — அவர் கதவு வழியாக நுழைந்தார்.
எப்போது எதைப் பயன்படுத்த வேண்டும்?
∙ ஒருவரின் இடத்தையோ வீட்டையோ குறிக்க → chez
∙ நோக்கம் அல்லது பயனாளியைக் குறிக்க → pour
∙ தொழில், பங்கு அல்லது ஒப்பீட்டைக் குறிக்க → comme
∙ வழி, பாதை அல்லது செயல்முறையைக் குறிக்க → par
🚀 இது தான் உண்மையான முன்னேற்றம் எப்படி இருக்கும் தெரியுமா?
என் மாணவர் ஒருவர் அனுப்பிய கருத்தைப் பாருங்கள்:
இலக்கணம் தெரிந்திருந்தும் பேச முடியாமல் தடுமாறும் நிலையில் இருந்து, இப்படி தயக்கமின்றி உரையாடும் நிலைக்கு வருவது — இதுதான் நாம் இலக்காகக் கொண்டிருப்பது.
✅ DELF A2 சுய பயிற்சித் திட்டம்
உங்கள் நேரத்திற்கேற்ப, தனியாகப் பயிற்சி செய்து DELF A2-க்கு தயாராகலாம். இதில் இலக்கணம், பேச்சு, எழுத்து ஆகிய பகுதிகள் அனைத்தும் அடங்கியுள்ளன.
கீழே உள்ள Link மூலம் பெறலாம் :
DELF A2 சுய பயிற்சித் திட்டம் 👉👉👉
https://www.frenchkalvi.fr/decouvrir
✅ பேச்சுப் பயிற்சித் திட்டம்
18 அத்தியாயங்கள், 75 காணொளிப் பாடங்கள், 18 ஒலிப் பயிற்சிகள் — பயமின்றி, இயல்பாக பிரெஞ்சு பேசக் கற்றுக்கொள்ள.
கீழே உள்ள Link மூலம் பெறலாம் :
https://www.frenchkalvi.fr/decouvrir-exp-orale
நன்றி,
தீபக் 🙏


