🇫🇷 கேள்வி எப்படி கேட்பது ?
A2 சான்றிதழ் பெற வேண்டுமா…
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
இன்று நாங்கள், பிரெஞ்சு மொழியில் மிகவும் முக்கியமான கேட்கும் 3 வழிகள் பற்றி கற்றுக்கொள்வோம்.
இது உங்கள் பிரெஞ்சு மொழியை மிகவும் இயல்பாகவும் சரளமாகவும் பேச உதவும்!
Les Questions = கேள்விகள்
பிரெஞ்சு மொழியில் கேள்வி கேட்க 3 வழிகள் உள்ளன.
உதாரணம்: Tu viens ce soir ?
∙ நீ இன்று இரவு வருகிறாயா?
இதை 3 வெவ்வேறு விதங்களில் கேட்கலாம்!
💡 எப்படி கண்டுபிடிப்பது? கேள்வி யாரிடம் பேசுகிறோம், எந்த சூழலில் பேசுகிறோம் என்பதை வைத்து மாறும்.
📝 3 வகை கேள்விகள்
1️⃣ Intonation (குரல் ஏற்றம்)
சாதாரண வாக்கியம் போலவே சொல்லி, கடைசியில் குரலை ஏற்றுவோம்.
∙ Tu viens ? ↗ — நீ வருகிறாயா?
∙ Il parle français ? ↗ — அவன் பிரெஞ்சு பேசுகிறானா?
🗣️ எப்போது பயன்படுத்துவது? நண்பர்கள், குடும்பத்தினர் — அதாவது இயல்பான பேச்சில்.
2️⃣ Est-ce que…?
வாக்கியத்தின் முன் “Est-ce que” சேர்க்கவும் — மற்றபடி எதுவும் மாறாது!
∙ Est-ce que tu viens ? — நீ வருகிறாயா?
∙ Est-ce qu’il parle français ? — அவன் பிரெஞ்சு பேசுகிறானா?
💡 எப்போது பயன்படுத்துவது? அன்றாட பேச்சிலும் சரி, formal-லும் சரி — DELF தேர்வில் மிகவும் பாதுகாப்பான வழி இது!
3️⃣ Inversion (தலைகீழ் மாற்றம்)
Subject மற்றும் Verb இடம் மாற்றி, இடையில் ”-” சேர்க்கவும்.
∙ Viens-tu ? — நீ வருகிறாயா?
∙ Parle-t-il français ? — அவன் பிரெஞ்சு பேசுகிறானா?
✍️ எப்போது பயன்படுத்துவது? எழுத்தில், formal சூழலில், DELF production écrite-இல்.
⚠️ கவனம் : “il / elle / on” + voyelle வரும்போது ”-t-” சேர்க்க வேண்டும்.
→ Parle-t-il ? ✅ / Parle-il ? ❌
🚀 நீங்கள் A2 சான்றிதழ் பெற வேண்டுமா ? இதை புரிந்துகொள்வது இன்றியமையாதது.
A2 சுய பயிற்சித் திட்டத்தின் மூலம் A2 சான்றிதழ் எப்படி பெறுவது என்று அறியலாம்👇
👉 [https://www.frenchkalvi.fr/decouvrir]
📝 DELF A2 சான்றிதழ் பெற தேவையான அனைத்தும் — ஒரே இடத்தில்.
நன்றி,
தீபக் 🙏

Merci beaucoup