🇫🇷 பிரெஞ்சில் எதிர்காலம்
Zoom வகுப்புகள் ஆரம்பம் !
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
📝 இன்று நாம் பார்க்கப் போவது: Futur Simple
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள செயல்கள், திட்டங்கள், வாக்குறுதிகள் மற்றும் கணிப்புகளை வெளிப்படுத்த Futur Simple பயன்படுத்தப்படுகிறது.
✍️ 5 முக்கியமான வினைச்சொற்கள் — Futur Simple
∙ Être
→ Je serai à Paris demain.
நாளை நான் பாரிஸில் இருப்பேன்.
→ Je serai content de te voir.
நான் உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருப்பேன்.
∙ Avoir
→ J’aurai un rendez-vous important.
எனக்கு ஒரு முக்கியமான சந்திப்பு இருக்கும்.
→ J’aurai trente ans l’année prochaine.
அடுத்த வருடம் எனக்கு முப்பது வயது ஆகும்.
∙ Aller
→ J’irai au marché ce week-end.
இந்த வார இறுதியில் நான் சந்தைக்குச் செல்வேன்.
→ J’irai chez le médecin lundi.
திங்கட்கிழமை நான் மருத்துவரிடம் செல்வேன்.
∙ Faire
→ Je ferai mes devoirs ce soir.
இன்று மாலை நான் வீட்டுப்பாடம் செய்வேன்.
→ Je ferai les courses demain matin.
நாளை காலை நான் பொருட்கள் வாங்கச் செல்வேன்.
∙ Pouvoir
→ Je pourrai parler français couramment dans 6 mois.
6 மாத காலத்தில் என்னால் சரளமாகப் பிரெஞ்சு பேச முடியும்.
→ Je pourrai t’aider ce week-end.
இந்த வார இறுதியில் நான் உனக்கு உதவ முடியும்.
📌 சிறு பயிற்சி
கீழே உள்ள வாக்கியங்களை Futur Simple-இல் நிரப்புங்கள்.
(faire, être, aller, avoir, pouvoir)
Demain, j’______ à la banque.
L’année prochaine, j’______ vingt-cinq ans.
Ce soir, je ______ la cuisine.
Je ______ très heureux de te revoir.
Bientôt, je ______ parler français sans difficulté.
✍️ இந்த வாக்கியங்களை நிரப்பி, உங்கள் பதில்களைப் பயிற்சி செய்யுங்கள்!
🚀 Zoom வழி பிரெஞ்சு வகுப்புகள் தொடர்கின்றன!
A1 வகுப்பு : புதன் - வெள்ளி - 9h30 - 11h
A2 வகுப்பு : செவ்வாய் - வியாழன் - 9h30 - 11h
B1 வகுப்பு : செவ்வாய் - வியாழன் - 6h - 7h30
அனுபவமிக்க வழிகாட்டுதலுடன் DELF தேர்வுக்கு முழுமையாக தயாராகுங்கள்!
📞 தொடர்புகொள்ளுங்கள் : +33 6 52 33 83 57
நன்றி,
தீபக் 🙏

Merci beaucoup