🗣️Alimentation கடையில்
பேசுவது எப்படி ?
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
இன்று நம் épicerie-யில் நடக்கும் உரையாடலை இரண்டு கோணங்களில் பார்க்கப் போகிறோம் — வாடிக்கையாளராக தேவைப்படும் சில வாக்கியங்கள், மற்றும் அங்கே பணிபுரியும் ஒருவருக்கான வாக்கியங்கள்!
✍️ வாடிக்கையாளர் சொல்வது — Ce que dit le client :
∙ Bonjour, vous avez du lait entier ? — வணக்கம், உங்களிடம் முழுப் பால் இருக்கிறதா?
∙ C’est combien, le kilo de pommes de terre ? — ஒரு கிலோ உருளைக்கிழங்கு எவ்வளவு?
∙ Où est-ce que je peux trouver l’huile de tournesol ? — சூரியகாந்தி எண்ணெய் எங்கே இருக்கிறது?
∙ Est-ce que vous avez quelque chose de bio ? — உங்களிடம் இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் இருக்கின்றனவா?
∙ Je peux avoir un sachet, s’il vous plaît ? — ஒரு பை தர முடியுமா, தயவுசெய்து?
∙ Je crois qu’il y a une erreur sur le ticket de caisse. — இந்த ரசீதில் ஒரு தவறு இருப்பதாக நினைக்கிறேன்.
✍️ பணியாளர் சொல்வது — Ce que dit l’employé :
∙ Bonjour, je peux vous aider ? — வணக்கம், உங்களுக்கு உதவலாமா?
∙ Désolé, cet article est en rupture de stock. — மன்னிக்கவும், இந்தப் பொருள் தற்போது கையிருப்பில் இல்லை.
∙ Vous trouverez ça au fond du magasin. — அதை கடையின் இறுதியில் காணலாம்.
∙ Ce produit sera disponible jeudi prochain. — இந்தப் பொருள் அடுத்த வியாழக்கிழமை கிடைக்கும்.
∙ Vous payez par carte ou en espèces ? — நீங்கள் அட்டையில் கட்டுகிறீர்களா அல்லது பணமாகக் கட்டுகிறீர்களா?
∙ Voici le reste. — இதோ மிகுதி பணம்.
∙ Vous voulez un sac ? — உங்களுக்கு ஒரு பை வேண்டுமா?
∙ Vous auriez 10 centimes ? — உங்களிடம் பத்து சென்ட்கள் இருக்குமா?
∙ On ferme à 22h. — நாங்கள் இரவு பத்து மணிக்கு மூடுகிறோம்.
∙ On est ouverts à partir de 9h du matin. — நாங்கள் காலை ஒன்பது மணி முதல் திறந்திருப்போம்.
∙ La livraison va arriver demain. — சரக்கு நாளை வந்து சேரும்.
🚀 புதிய Zoom வகுப்புகளில் இணையுங்கள்!
இதுபோன்ற நடைமுறை உரையாடல்களை வகுப்பில் நேரடியாகப் பயிற்சி செய்யலாம். இரண்டு புதிய வகுப்புகள் இந்த மாதம் ஆரம்பம் :
👉 புதிய அடிப்படை A1 வகுப்பு — June 14 ஆம் தேதி முதல்
👉 புதிய B1 வகுப்பு — June 21 ஆம் தேதி முதல்
அனைத்து வகுப்புகளும் Zoom ஊடாக நடைபெறும்.
📞 தொடர்புகொள்ளுங்கள் : +33 652338357
நன்றி,
தீபக் 🙏



Merci beaucoup