🎯 COD என்றால் என்ன?
DELF A2, B1
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
இன்று நாங்கள், பிரெஞ்சு மொழியில் மிகவும் முக்கியமான COD (Complément d’Objet Direct) மற்றும் pronoms COD (நேரடி பொருள் பிரதிபெயர்கள்) பற்றி கற்றுக்கொள்வோம்.
இது உங்கள் பிரெஞ்சு மொழியை மிகவும் இயல்பாகவும் சரளமாகவும் பேச உதவும்!
COD (Complément d’Objet Direct) = நேரடி பொருள்
இது ஒரு வினைச்சொலின் செயலை நேரடியாகப் பெறும் பொருள்.
உதாரணம்: Je mange une pomme.
∙ நான் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுகிறேன்.
இங்கே “une pomme” என்பது COD ஆகும் — ஏனெனில் “சாப்பிடுதல்” என்ற செயலைநேரடியாகப் பெறுகிறது.
💡 எப்படி கண்டுபிடிப்பது? வினைச்சொல்லுக்குப் பின் வந்து “என்ன?” அல்லது “யார்?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும்.
∙ Je mange quoi ? → une pomme (COD)
📝 Pronoms COD (நேரடி பொருள் பிரதிபெயர்கள்)
ஒரே பொருளை மீண்டும் மீண்டும் சொல்வதைத் தவிர்க்க, நாம் pronoms COD பயன்படுத்துகிறோம்.
📌 7 Pronoms COD:
1. me / m’ = என்னை
∙ Il me voit. - அவன் என்னைப் பார்க்கிறான்.
2. te / t’ = உன்னை
∙ Je te connais. - நான் உன்னை அறிவேன்.
3. le / l’ = அவனை / அதை (ஆண்)
∙ Elle le regarde. - அவள் அவனைப் பார்க்கிறாள்.
4. la / l’ = அவளை / அதை (பெண்)
∙ Nous la cherchons. - நாங்கள் அவளைத் தேடுகிறோம்.
5. nous = நம்மை / எங்களை
∙ Vous nous invitez. - நீங்கள் எங்களை அழைக்கிறீர்கள்.
6. vous = உங்களை
∙ Ils vous attendent. - அவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.
7. les = அவர்களை / அவைகளை
∙ Je les aime. - நான் அவர்களை விரும்புகிறேன்.
COD pronoms பயன்படுத்துவது உங்கள் பிரெஞ்சு மொழியை மிகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் ஒலிக்கச் செய்யும். இதை
🚀 இதை நன்றாக கற்க விரும்புகிறீர்களா?
A2 சுய பயிற்சித் திட்டத்தின் மூலம் உடனே படிக்க தொடங்கலாம் 👇
👉 [https://www.frenchkalvi.fr/methode]
📝DELF A2 சான்றிதழ் பெற தேவையான அனைத்தும் — ஒரே இடத்தில்.
நன்றி,
தீபக் 🙏

