🚫கட்டாயத்தை வெளிப்படுத்தும் முறை
பிரெஞ்சு மொழி !
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
📝 இன்று நாம் பிரெஞ்சு மொழியில் கட்டாயத்தை வெளிப்படுத்தும் முறையைப் பார்க்கலாம் - L’expression de l’obligation.
பிரெஞ்சு மொழியில் அவசியத்தை வெளிப்படுத்த இரண்டு முக்கிய வழிகள் உள்ளன - DEVOIR மற்றும் FALLOIR.
✍️ DEVOIR - தனிப்பட்ட கடமையை வெளிப்படுத்துகிறது
Je dois, tu dois, il doit, nous devons, vous devez, ils doivent
Je dois partir demain ∙ நான் நாளை கிளம்ப வேண்டும்
Vous devez arriver à l’heure ∙ நீங்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும்
Nous devons respecter les règles ∙ நாம் விதிமுறைகளை மதிக்க வேண்டும்
Tu dois faire tes devoirs ∙ நீ உன் வீட்டுபாடத்தை செய்ய வேண்டும்
Ils doivent réserver une table ∙ அவர்கள் ஒரு மேசையை முன்பதிவு செய்ய வேண்டும்
✍️ FALLOIR - பொதுவான அவசியத்தை வெளிப்படுத்துகிறது
Il faut - இது எப்போதும் Il என்ற வடிவத்திலேயே பயன்படுத்தப்படும், அனைவருக்கும் பொருந்தும்
Il faut visiter Paris ∙ பாரிஸ் பார்வையிட வேண்டும்
Il ne faut pas parler fort ∙ சத்தமாக பேசக் கூடாது
Il faut manger sainement ∙ ஆரோக்கியமாக உணவு உண்ண வேண்டும்
Il faut apprendre le français tous les jours ∙ ஒவ்வொரு நாளும் பிரெஞ்சு கற்க வேண்டும்
💡 எப்போது எதை?
DEVOIR - ஒரு குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட கடமையைச் சொல்லும்போது பயன்படுத்தவும் (எ.கா: நான், நீங்கள், அவர்)
FALLOIR - எல்லோருக்கும் பொதுவாகப் பொருந்தும் அவசியத்தைச் சொல்லும்போது பயன்படுத்தவும்
📌 இந்த இரண்டு வினைச்சொற்களையும் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால், உங்கள் பேச்சு இன்னும் இயல்பாகவும் தெளிவாகவும் அமையும்.
🚀 இதுபோன்ற இலக்கண விடயங்களை ஆழமாகக் கற்று, நடைமுறையில் தொடர்ந்து பேசும் திறனை வளர்த்துக்கொள்ள எங்களுடைய பேச்சு பயிற்சித் திட்டத்தில் இணையுங்கள். 18 அத்தியாயங்கள், 75 காணொளிப் பாடங்கள், 18 ஒலிப் பயிற்சிகள், 18 வினாடி வினாக்கள் மற்றும் 18 PDF ஆவணங்களுடன் உங்கள் சொந்த நேரத்தில் கற்றுக்கொள்ளலாம்.
👉 கீழே அழுத்தி பெற்றுக்கொள்ளலாம்:
நன்றி,
தீபக் 🙏

