"De"
🇫🇷 ஒரு முக்கியமான பிரெஞ்சு சொல்
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
📝 இன்று ஒரு சின்ன வார்த்தையைப் பார்ப்போம் — « de ». சிறியதாகத் தெரிந்தாலும், பிரெஞ்சு மொழியில் இது பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.
✍️ 1. அளவைத் தெரிவிக்கும்போது « de »
∙ Beaucoup de personnes — நிறைய பேர்
∙ Un peu de sucre — கொஞ்சம் சர்க்கரை
∙ Trop de travail — அதிகமான வேலை
✍️ 2. மறுப்பு வாக்கியங்களில் « du / de la / des » → « de »
∙ J’ai du temps. — எனக்கு நேரம் இருக்கிறது.
∙ Je n’ai pas de temps. — எனக்கு நேரம் இல்லை.
∙ Elle boit du café. → Elle ne boit pas de café.
— அவள் காபி குடிக்கிறாள். → அவள் காபி குடிப்பதில்லை.
✍️ 3. பன்மை பெயர்ச்சொல்லுக்கு முன் adjective வந்தால் « des » → « de »
∙ J’ai acheté des chaussures. — நான் ஷூக்கள் வாங்கினேன்.
∙ J’ai acheté de nouvelles chaussures. — நான் புதிய ஷூக்கள் வாங்கினேன்.
✍️ 4. உடைமையைத் தெரிவிக்க « de »
∙ Le livre de Marie — மேரியின் புத்தகம்
∙ La voiture de mon frère — என் சகோதரனின் கார்
✍️ 5. « de » = « இருந்து »
∙ Je viens de France. — நான் பிரான்ஸிலிருந்து வருகிறேன்.
∙ Nous rentrons du Canada. — நாங்கள் கனடாவிலிருந்து திரும்புகிறோம்.
💡 இங்கே de + le = du ஆக மாறுகிறது.
✍️ 6. சில வினைச்சொற்களுடன் « de » கட்டாயமாக வரும்
∙ Avoir besoin de — தேவைப்படுதல்
J’ai besoin de ton aide.
— எனக்கு உன் உதவி தேவை.
✍️ 7. இரண்டு பெயர்ச்சொற்களை இணைக்க « de »
∙ Une tasse de café — ஒரு கப் காபி
∙ Une salle de bain — குளியலறை
∙ Un cours de français — ஒரு பிரெஞ்சு வகுப்பு
∙ Une paire de chaussures — ஒரு ஜோடி காலணிகள்
📌 « de » ஒரு சின்ன வார்த்தைதான். ஆனால், அதன் பின்னால் இருக்கும் லாஜிக்கைப் புரிந்துகொண்டால், ஒவ்வொரு வாக்கியத்தையும் தனித்தனியாக மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை.
🚀 இதே போன்ற இலக்கண விடயங்களைப் முழுமையாக பயிற்சி செய்ய விரும்புகிறீர்களா?
எங்கள் A2 சுய பயிற்சித் திட்டத்தில்:
📚 52 Chapters
🎧 75 Audio
📝 Exercises, Correction
📄 Exam Papers
உங்கள் நேரத்திற்கு ஏற்ப, தன்னிச்சையாகக் கற்றுக்கொள்ளலாம்!
நன்றி,
தீபக் 🙏
