🇫🇷 வைத்தியசாலையில் தேவைப்படும் வசனங்கள்
B1, B2 வகுப்புகள் அரம்பம் !
அனைவருக்கும் வணக்கம்,
இன்று நாங்கள் பிரெஞ்சு பேசும் நாடுகளில் மருத்துவ அவசர நிலைகளுக்கான சில அத்தியாவசிய வசனங்களைப் பார்ப்போம்.
இந்த வசனங்களை தெரிந்துகொள்வதோடு 2-3 முறை சத்தமாக வாசித்துப் பாருங்கள்.
🤒 அறிகுறிகள்
Depuis quand vous sentez-vous comme ça ?
நீங்கள் எப்பொழுதிலிருந்து இவ்வாறு உணர்கிறீர்கள் ?Est-ce que ça fait mal ?
அது வலிக்கிறதா?Vous avez déjà eu ce problème avant ?
இந்தப் பிரச்சனை முன்பு இருந்ததா?Est-ce que vous prenez des médicaments régulièrement ?
நீங்கள் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்களா?Vous êtes allergique à quelque chose ?
ஏதேனும் பொருளுக்கு உங்களுக்கு ஒவ்வாமை இருக்கிறதா?Je tousse beaucoup.
நான் அதிகமாக இருமுகிறேன்.J’ai du mal à respirer.
எனக்கு சுவாசிக்க சிரமமாக உள்ளது.J’ai mal au ventre.
என் வயிறு வலிக்கிறது.J’ai mal au dos.
என் முதுகு வலிக்கிறது.J’ai des vertiges / J’ai la tête qui tourne.
எனக்கு தலை சுற்றுகிறது.🚨 அவசர நிலைகள்
C’est urgent !
இது அவசரமானது!J’ai eu un accident.
எனக்கு விபத்து ஏற்பட்டது.Je saigne beaucoup.
நான் மிகுந்த இரத்தம் சிந்துகிறேன்.Je me suis cassé le bras.
என் கை முறிந்துவிட்டது.Je ne sens plus ma jambe.
எனது காலை உணர முடியவில்லை.Appelez une ambulance, s’il vous plaît !
தயவுசெய்து ஆம்புலன்ஸ் அழைக்கவும்Où se trouve les urgences ?
அவசரச் சிகிச்சைப் பிரிவு எங்கே உள்ளது?Mon enfant est malade.
என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை.Il a perdu connaissance.
அவர் மயக்கம் அடைந்தார்.Avez-vous perdu connaissance ?
நீங்கள் மயக்கம் அடைந்தீர்களா?மேலும் இது போன்ற இன்னும் ஒரு செய்திமடலில் சந்திக்கிறேன்.
🇫🇷 புதிய B1, B2 வகுப்புகள் அரம்பம் !
October 9ஆம் தேதி முதல் ஒவ்வொரு வியாழன் இரவு 7:00 - 9:00 B1 வகுப்பு - 3 மாத கட்டணம் 300€
October 12ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 - 3:00 B2 வகுப்பு தொடங்க உள்ளது - 3 மாத கட்டணம் 330€
☎️ தொடர்புகொள்ளுங்கள் +33 652338357
நன்றி,
தீபக் 🙏

Merci beaucoup