🙏Faire appel à (B1)
- உதவிக்காக ஒருவரை அணுகுதல்
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
இன்று நாம் பார்க்கப் போவது நம் அன்றாட வாழ்வில் — குறிப்பாக அலுவல் சூழல்களில் — மிகவும் அவசியமான சில பிரெஞ்சு சொற்றொடர்கள். இவற்றை நீங்கள் கற்றுக்கொண்டால், உங்கள் பிரெஞ்சு பேச்சும் எழுத்தும் உடனடியாக இன்னும் இயல்பாகவும் தெளிவாகவும் மாறும்.
பிரெஞ்சு மொழியில் சில வினைச்சொல் சொற்றொடர்கள் (expressions verbales) உள்ளன. இவை தனித்தனி வார்த்தைகளாக இல்லாமல், ஒரு முழுமையான கருத்தை வெளிப்படுத்துகின்றன. இவற்றை அப்படியே மனதில் பதித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
✍️ சொற்றொடர்கள் மற்றும் பொருள்
🔹 Mettre au point – ஒரு விடயத்தை இறுதியாகத் தெளிவுபடுத்துதல் அல்லது முடிவுக்குக் கொண்டுவருதல்
→ Il faut mettre au point les détails du projet.
→ திட்டத்தின் விவரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
🔹 Donner suite – ஒரு கோரிக்கைக்கு அல்லது விடயத்திற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது
→ Je vais donner suite à votre demande.
→ உங்கள் கோரிக்கைக்கு நான் நடவடிக்கை எடுக்கப் போகிறேன்.
🔹 Mettre en place – ஒரு திட்டத்தை அல்லது முறைமையை அமைத்தல்
→ Il faut mettre en place un nouveau système.
→ புதிய ஒரு முறைமையை அமைக்க வேண்டும்.
🔹 Tenir compte de – கணக்கில் எடுத்துக்கொள்ளுதல்
→ Il faut tenir compte de votre situation.
→ உங்கள் நிலைமையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
🔹 Faire part de – ஒரு விடயத்தை யாரிடமாவது தெரிவிப்பது
→ Je vous fais part de ma décision.
→ என் முடிவை உங்களிடம் தெரிவிக்கிறேன்.
🔹 Faire appel à – உதவிக்காக ஒருவரை அணுகுதல்
→ Nous avons fait appel à un expert.
→ நாங்கள் ஒரு நிபுணரின் உதவியை நாடினோம்.
🔹 Se rendre compte – ஒரு விடயத்தை உணர்தல் அல்லது புரிந்துகொள்ளுதல்
→ Je me rends compte que c’est difficile.
→ இது கடினமானது என்பதை நான் உணர்கிறேன்.
🔹 Prendre en main – ஒரு விடயத்தைத் தானாகப் பொறுப்பேற்று கையாளுதல்
→ Il a décidé de prendre en main sa formation.
→ அவர் தனது பயிற்சியைத் தானே பொறுப்பேற்று மேற்கொள்ள முடிவு செய்தார்.
🔹 Mettre fin à – ஒரு விடயத்தை நிறுத்துதல் அல்லது முடிவுக்குக் கொண்டுவருதல்
→ Il faut mettre fin à ces difficultés.
→ இந்த சிரமங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.
🔹 Faire face à – ஒரு கடினமான நிலைமையை எதிர்கொள்ளுதல்
→ Elle sait faire face à toutes les situations.
→ அவள் எல்லா சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளத் தெரியும்.
💡 எப்போது எதைப் பயன்படுத்துவது?
இந்த சொற்றொடர்கள் குறிப்பாகப் பயனுள்ளவை:
• அலுவலகத்தில் பேசும்போது
• மருத்துவமனை அல்லது நிர்வாகச் சந்திப்புகளில்
• DELF B1 தேர்வின் Production Orale பகுதியில்
📌 இந்த சொற்றொடர்களை நீங்களும் பயிற்சி செய்து பாருங்கள் !
🚀 புதிய DELF B1 பிரெஞ்சு வகுப்பு — ஜூன் 21 முதல் தொடங்குகிறது!
இந்த வகுப்பில் நீங்கள் பெறுவது:
✅ அனைத்து வகுப்புகளும் Zoom ஊடாக நடைபெறும்
✅ ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 முதல் 10:30 வரை
✅ மாதத்திற்கு 4 வகுப்புகள் — மொத்தம் 6 மாத பயிற்சி
✅ தேவையான Audio மற்றும் PDF கள் வழங்கப்படும்
✅ DELF B1 தேர்வுக்கு முழுமையான தயாரிப்பு வழங்கப்படும்
📞 +33 6 52 33 83 57
நன்றி,
தீபக் 🙏

