✈️அனுபவத்தைப் பற்றிப் பேசுவது…
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
DELF A2 தேர்வில் ஒரு முக்கியமான பகுதி உள்ளது — உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவத்தைப் பற்றிப் பேசுவது. பயணம், கொண்டாட்டம், ஒரு சிறப்பான நாள் — இவற்றை எப்படிப் பேசுவது என்று அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்.
இன்று, அனுபவங்களை விளக்கப் பயன்படும் முக்கியமான சொற்றொடர்களைப் பார்ப்போம்.
📝 எப்போது நடந்தது என்று சொல்ல
∙ L’année dernière, j’ai… — கடந்த ஆண்டு, நான்…
∙ Il y a quelques mois, j’ai… — சில மாதங்களுக்கு முன், நான்…
∙ Quand j’avais… ans, j’ai… — எனக்கு… வயதாக இருந்தபோது, நான்…
✍ நிகழ்வை வரிசையாக விளக்க
∙ D’abord, j’ai… — முதலில், நான்…
∙ Ensuite, j’ai… — பிறகு, நான்…
∙ À la fin, j’ai… — இறுதியில், நான்…
∙ Le matin, nous avons… et l’après-midi, nous avons… — காலையில் நாங்கள்… மாலையில் நாங்கள்…
💡 உணர்வுகளை வெளிப்படுத்த
∙ C’était vraiment bien ! — அது மிகவும் நன்றாக இருந்தது!
∙ J’ai adoré cette expérience parce que… — இந்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்தது, ஏனென்றல்…
∙ C’était un peu difficile mais… — கொஞ்சம் கடினமாக இருந்தது, ஆனால்…
∙ Je me suis senti(e) très heureux/heureuse. — நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
📌 எப்போது எதப் பயன்படுத்தலாம்?
நிகழ்வு எப்போது என்று சொல்ல → L’année dernière / il y a…
நடந்தவற்றை வரிசையாகச் சொல்ல → D’abord, ensuite, à la fin
உணர்வைத் தெரிவிக்க → C’était bien, j’ai adoré, je me suis senti(e)…
இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தினால், தேர்வில் தெளிவாகவும் நம்பிக்கையோடும் பேசலாம் / எழுதலாம். இப்போதே சில வசனங்கள் அமைக்க முயற்சி செய்யுங்கள் !
🚀 சொற்றொடர்கள் தெரிந்தாலும் பேசும்போது தயக்கமாக இருக்கிறதா? அதுவே பெரும்பாலான மாணவர்களின் உண்மையான சிக்கல். தீர்வு ஒன்றே ஒன்றுதான் — பேசிப் பயிற்சி செய்வது.
✅ பேச்சு பயிற்சித் திட்டம்
காணொளிப் பாடங்கள், ஒலிப் பயிற்சிகள், வினாடி வினாக்கள், PDF தாள்கள் — அனைத்தும் உங்கள் நேரத்திற்கேற்ப, தனியாகவே செய்யலாம். அன்றாட வாழ்க்கைக்கும் தேர்விறகும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது.
👉👉 frenchkalvi.fr/decouvrir-exp-orale
✅ DELF A2 சுய பயிற்சித் திட்டம்
தேர்வின் அனைத்துப் பகுதிகளையும் — production orale உட்பட — படிப்படியாகத் தயர்படுத்திக்கொள்ள இந்தத் திட்டம் உதவும். தேர்வு முறை, மதிப்பெண் அமைப்பு என அனைத்தும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.
நன்றி,
தீபக் 🙏
