📝 முன்னிடைச்சொற்கள் — Les prépositions
புதிய A2, B1 வகுப்புகள்
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
பிரெஞ்சில் ஒரு இடத்தை விவரிக்கத் தெரியாமல் திணறிய தருணங்கள் உங்களுக்கும் வந்திருக்கும் — ஒரு நபர் எங்கே நிற்கிறார், ஒரு பொருள் எங்கே இருக்கிறது என்று சொல்ல வேண்டும், ஆனால் சரியான வார்த்தை தெரியாமல் இருந்திருக்கலாம்.
இன்று அந்த பிரச்சனைக்கு ஒரு தெளிவான தீர்வு தருகிறேன்.
📝 முன்னிடைச்சொற்கள் — Les prépositions
இவை ஒரு நபரின் அல்லது பொருளின் நிலையை குறிக்கும் வார்த்தைகள். இந்த வார்த்தைகளை ஒரு முறை கற்று விட்டால், இனி அந்த பிரச்சனை இருக்காது.
✍️ முன்னிடைச்சொற்கள் மற்றும் உதாரணங்கள்:
💡 à droite de — வலது பக்கம்
∙ Le chat est à droite de Jean. — பூனை ஜொனின் வலது பக்கம் இருக்கிறது.
💡 à gauche de — இடது பக்கம்
∙ Le chien est à gauche de Jean. — நாய் ஜொனின் இடது பக்கம் இருக்கிறது.
💡 sur — மேல்
∙ Le chat est sur la table. — பூனை மேசையின் மேல் இருக்கிறது.
💡 sous — கீழ்
∙ Le chien est sous la table. — நாய் மேசையின் கீழ் இருக்கிறது.
💡 devant — முன்னால்
∙ Le chat est devant la table. — பூனை மேசையின் முன்னால் இருக்கிறது.
💡 derrière — பின்னால்
∙ Le chien est derrière la table. — நாய் மேசையின் பின்னால் இருக்கிறது.
💡 en haut de — மேலே / உச்சியில்
∙ Le chat est en haut de l’arbre. — பூனை மரத்தின் உச்சியில் இருக்கிறது.
💡 en bas de — கீழே
∙ Le chien est en bas de l’arbre. — நாய் மரத்தின் கீழே இருக்கிறது.
💡 à côté de — அருகில்
∙ Le chat est à côté de la voiture. — பூனை வாகனத்தின் அருகில் இருக்கிறது.
💡 dans — உள்ளே
∙ Le chien est dans la voiture. — நாய் வாகனத்தின் உள்ளே இருக்கிறது.
💡 entre — இடையில்
∙ Le chat est entre Marie et Jean. — பூனை மேரி மற்றும் ஜொன் இடையில் இருக்கிறது.
💡 en face de — எதிரில்
∙ Jean est en face de Marie. — ஜொன் மேரிக்கு எதிரில் நிற்கிறார்.
🚀 மே 12 ஆம் தேதி முதல் — புதிய Zoom வகுப்புகள் தொடங்குகின்றன!
இந்த மாதிரி பாடங்களை என்னுடன் நேரடியாக பயிற்சி செய்து, DELF தேர்வுக்கு தயாராக விரும்புகிறீர்களா?
✅ A2 நிலை வகுப்பு — செவ்வாய் மற்றும் வியாழன், காலை 6:00 – 7:30
∙ முதல் 2 மாத கட்டணம்: இருநூற்று ஐம்பது யூரோக்கள்
✅ B1 நிலை வகுப்பு — செவ்வாய் மற்றும் வெள்ளி, இரவு 20:00 – 21:30
∙ முதல் 2 மாத கட்டணம்: இருநூற்று எழுபது யூரோக்கள்
4 மாத வகுப்பு | மாதம் 8 வகுப்புகள்
அனைத்து வகுப்புகளும் Zoom ஊடாக நடைபெறும்
தேவையான ஒலிப் பயிற்சிகள் மற்றும் PDF வழங்கப்படும்
DELF A2, B1 தேர்வுகளுக்கு முழுமையாக தயார் செய்துவிடப்படும்
நன்றி,
தீபக் 🙏
