🌞Les vacances d’été
அடிப்படை பிரெஞ்சு சொற்கள் !
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
📝 இந்த வாரம் கோடை விடுமுறைக்கான (vacances d’été) பயனுள்ள சொற்களையும் தொடர்களையும் பார்க்கலாம். கோடைக்காலத்தில் பயணம், கடற்கரை, விடுதி முன்பதிவு போன்ற பல சூழல்களில் பேசத் தேவையான French சொற்களை இன்று கற்போம்.
✍️ அடிப்படைச் சொற்கள் :
∙ Les vacances – விடுமுறை
∙ La plage – கடற்கரை
∙ Le soleil – சூரியன்
∙ La mer – கடல்
∙ Le maillot de bain – குளியல் உடை
∙ Les lunettes de soleil – கருப்புக் கண்ணாடி
∙ La crème solaire – சூரியக் காப்பு கிரீம்
∙ La valise – பயணப் பெட்டி
∙ L’hôtel – விடுதி
∙ La réservation – முன்பதிவு
∙ Le camping – முகாமிடுதல்
∙ La randonnée – மலை நடைப் பயணம்
∙ La piscine – நீச்சல் குளம்
∙ Bronzer – வெயிலில் தோலை கருமையாக்குதல்
∙ Se baigner – நீராடுதல்
💡 பயன்பாட்டு வாக்கியங்கள் :
∙ Je vais à la plage avec ma famille. – நான் என் குடும்பத்துடன் கடற்கரைக்குச் செல்கிறேன்.
∙ N’oublie pas ta crème solaire ! – உன் சூரியக் காப்பு கிரீமை மறக்காதே!
∙ Nous avons réservé l’hôtel pour une semaine. – நாங்கள் ஒரு வாரத்திற்கு விடுதியை முன்பதிவு செய்துள்ளோம்.
∙ J’aime faire de la randonnée en été. – கோடைக்காலத்தில் மலை நடைப் பயணம் செய்வது எனக்குப் பிடிக்கும்.
∙ On va se baigner dans la mer cet après-midi. – இன்று மதியம் நாங்கள் கடலில் நீராடப் போகிறோம்.
📌 எப்போது எதை? :
∙ பயணத்திற்கு முன் : réserver l’hôtel, faire la valise
∙ கடற்கரையில் : se baigner, bronzer, porter des lunettes de soleil
∙ மலைப் பகுதியில் : faire de la randonnée, faire du camping
இந்தச் சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்கி, உங்கள் கோடை விடுமுறைத் திட்டத்தை French-இல் விவரிக்கப் பயிற்சி செய்யுங்கள். எழுதுவது எளிது. ஆனால் பேசும்போது இதே சொற்கள் உடனடியாக நினைவுக்கு வர வேண்டும். அதற்குத்தான் தொடர்ச்சியான பேச்சுப் பயிற்சி மிகவும் அவசியம்.
இந்த சொற்கள் அனைத்தும் A1, A2 நிலைக்கு பொருத்தமானது.
🚀 DELF A2 சுய பயிற்சித் திட்டம் :
DELF A2 தேர்வை இலக்காகக் கொண்டு படிப்பவர்களுக்காக, உங்கள் நேரத்திற்கேற்ப, உங்கள் வீட்டிலிருந்தே பயிலக்கூடிய DELF A2 சுய பயிற்சித் திட்டம் தயாராக உள்ளது. இலக்கணம், சொற்களஞ்சியம், எழுத்துத் திறன், கேட்புத் திறன், வாசிப்புத் திறன் மற்றும் பேச்சுத் திறன் என அனைத்து பகுதிகளையும் முறையாக உள்ளடக்கிய இந்தத் திட்டம், DELF A2 தேர்வுக்குத் தயாராக விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கீழே அழுத்தி பெற்றுக்கொள்ளலாம்
👉 https://www.frenchkalvi.fr/decouvrir
🗣️ பேச்சுப் பயிற்சித் திட்டம் :
பல மாணவர்கள் பல ஆண்டுகளாக French படித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் பேசும்போது இன்னும் தயக்கம் காட்டுவதை நான் அடிக்கடி பார்க்கிறேன். அந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கத்துடன், 18 அத்தியாயங்கள், 75 வீடியோப் பாடங்கள், 18 ஒலிப் பயிற்சிகள், 18 வினாடி வினாக்கள் மற்றும் 18 PDF குறிப்புகள் அடங்கிய முழுமையான பேச்சுப் பயிற்சித் திட்டத்தை உருவாக்கியுள்ளேன்.
இந்தப் பயிற்சித் திட்டம் முழுமையாக தன்னிச்சையான online வடிவில் அமைந்துள்ளது. எனவே, உங்கள் வசதிக்கேற்ப, நீங்கள் விரும்பும் நேரத்தில், உங்கள் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்ளலாம்.
கீழே உள்ள Link மூலம் பெறலாம் :
https://www.frenchkalvi.fr/decouvrir-exp-orale
நன்றி,
தீபக் 🙏
