📝 L’impératif என்றால் என்ன?
பேச்சு பயிற்சித் திட்டம்!
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
இந்த வாரம் ஒரு மிகவும் நடைமுறையான இலக்கண பாடம் பார்க்கலாம் — L’impératif.
📝 L’impératif என்றால் என்ன?
L’impératif என்பது ஒரு கட்டளை தர, வேண்டுகோள் வைக்க, அல்லது யாரையாவது ஊக்குவிக்க பயன்படும் வினை வடிவம். இதில் மூன்று வடிவங்கள் மட்டுமே உண்டு — tu, nous, vous.
✍️ -ER வினைகளுக்கு எப்படி உருவாக்குவது?
Parler வினை Impératif வடிவத்தில் :
∙ tu → Parle ! (பேசு)
∙ nous → Parlons ! ( பேசலாம்)
∙ vous → Parlez ! (பேசுங்கள்)
📌 முக்கிய விதி : tu வடிவத்தில் -ER வினைகளுக்கு கடைசி “s” வராது. “Parles” என்று எழுதக்கூடாது, “Parle” என்று மட்டுமே எழுத வேண்டும்.
finir என்ற வினை :
∙ tu → Finis !
∙ nous → Finissons !
∙ vous → Finissez !
💡 அன்றாட உரையாடலில் உதாரணங்கள் :
∙ Attendez une minute, s’il vous plaît. — ஒரு நிமிடம் காத்திருங்கள்.
∙ Répétez s’il vous plaît. — மீண்டும் சொல்லுங்கள்.
∙ Parle plus lentement. — கொஞ்சம் மெதுவாகப் பேசு.
∙ Entrez ! — உள்ளே வாருங்கள்.
∙ Écoutez bien. — கவனமாகக் கேளுங்கள்.
∙ Sois patient. — பொறுமையாக இரு.
∙ Soyez à l’heure. — நேரத்தில் வாருங்கள்.
∙ Aie confiance. — நம்பிக்கையாக இரு.
🚀 இதுபோன்ற அன்றாட சூழல்களில் பயன்படும் பேச்சு வழக்குகளை நேரடியாக பயிற்சி செய்ய விரும்புகிறீர்களா?
French Kalvi பேச்சு பயிற்சித் திட்டத்தில் 75 காணொளி பாடங்கள், 18 Audio கள், 18 வினாடி வினாக்கள், மற்றும் 18 PDF வழிகாட்டிகள் உள்ளன — அனைத்தும் அன்றாட வாழ்க்கை சூழல்களை அடிப்படையாகக் கொண்டவை.
👉👉 இப்போதே பெறலாம் : frenchkalvi.fr/decouvrir
📞 தொடர்பு கொள்ள : +33 6 52 33 83 57
நன்றி,
தீபக் 🙏
